இலங்கை வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்.



எம்.ஏ.முகமட்-
லங்கை வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டமொன்று அரச சேவைகள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்பாக இக் கவனயீர்ப்புப் போராட்டம் (13) முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை,வவுனியா,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வெளிநாட்டுப் பட்டதாரிகள் இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

நிராகரித்த வெளிநாட்டுப் பட்டதாரிகளின் நியமனத்தை விரைவு படுத்து,60ஆயிரம் பட்டதாரிகளின்
வெளிநாட்டுப் பட்டதாரிகளையும் இதில் உள்வாங்கு,Google form இற்கான பதிலினை வழங்கு,தீர்வு தா,தீர்வு தா, போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியவாறு இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் வெளிநாட்டு பட்டதாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
இவ் அரசாங்கத்தினால் 60ஆயிரம் பேருக்கான நியமனத்தில் 53ஆயிரம் பேருக்கு மாத்திரம் வழங்கப் பட்டுள்ளன. இன்னும் 7ஆயிரம் பேருக்கு இந்நியமனம் வழங்கப் படவுள்ளதோடு,இதில் எஞ்சியுள்ள தொகையில் வெளிநாட்டுப் பட்டதாரிகளையும் உள்வாங்கி நியமனம் வழங்க அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ச உடன் நடவடிக்கை எடுக்குமாறு வெளிநாட்டுப் பட்டதாரிகள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் குறித்த வெளிநாட்டுப் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டு பிரதேச செயலகங்களில் வேலை செய்த எங்களுக்கு பொதுத் தேர்தல் முடிந்த பின் அனைவருக்கும் நியமனம் தருவதாக அரசாங்கப் கூறியது.தற்போது அந்நியமனங்கள் வழங்கப் படவில்லை.

இன்று இறுதியாக அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிரி அவர்களை இவ் ஒன்றியத்தின் குழுவினர் சந்தித்தித்து பேசிய போது இந்நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப் படவில்லை என்றும்,அமைச்சரவை அனுமதி வழங்கினால் நியமனம் வழங்கவுள்ளேன் என்றார்.
இக் கவனயீர்ப்புப் போராட்டத்தை இலங்கை வெளிநாட்டுப் பட்டதாரிகள் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்ததமை குறிப்பிடத் தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :