மலேரியா தடுப்பு தெளி கருவி இயக்குனர்களாக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்வோரை கௌரவிக்கும் நிகழ்வு



ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்ட மலேரியா ஒழிப்புப் பிரிவில் தெளி கருவி இயக்குனர்களாக கடமையாற்றி ஓய்வு பெற்றும் செல்லும் நபர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றது.

கிழக்கு மாகாண தெளிகருவி இயக்குனர் இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (01) திருகோணமலையில் உள்ள மாகாண சுகாதார சேவைகள் பணிமனை மண்டபத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில் சுமார் 30 நபர்களுக்கு நினைவுச் சின்னம்,அன்பளிப்பு பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் கலந்து சிறப்பித்தார்.
மலேரியா தடுப்பு பிரிவில் தெளி கருவி இயந்திர இயக்குனர்களாக பல வருட காலம் சேவையாற்றி ஓய்வு நிலை பெறும் ஊழியர்களை கௌரவிக்கும் முகமாக இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் டீ.ஜீ.எம்.கொஸ்தா, பிரதி பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் வீ.பிரேமானந்த், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் என்.சரவணபவன், பிராந்திய மலேரியா தடுப்பு பிரிவு வைத்தியர் பீ.உசாநந்தினி, வைத்தியர் டி.நிலோஜன் மற்றும் தொற்றா நோய் பிரிவு வைத்தியர் எம்.எம்.எம்.முனாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :