மட்டக்களப்பு - ஏறாவூர் நகரசபையின் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்.



ஏறாவூர் சாதிக் அகமட்-
ட்டக்களப்பு - ஏறாவூர் நகர சபையின்; தலைவரால் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான சுமார் 164 மில்லியன் ரூபாவுக்குரிய வரவு செலவுத் திட்டம் எதிர்ப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இச்சபையின் விசேட சபைக் கூட்டமும் பாதீடு சமர்ப்பிப்பும் இன்று புதன்கிழமை நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழிம் (ஐக்கிய தேசிய கூட்டமைப்பு) தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் ஏறாவூர் நகர சபையின் மொத்தமுள்ள அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் 17 பேரில் 14 பேர் கலந்து கொண்டிருந்தனர்.

03 பேர் இன்றைய சபை அமவர்வில் கலந்துகொண்டிருக்கவில்லை
இன்று கலந்துகொண்டிருந்த அனைவரும் ஏகமனதாக வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளித்தனர்.
அத்துடன் நகர சபையின் கணக்காளர் ஆர்.எப். புஸ்ரா உட்பட சபையின் விடயதானத்திற்குரிய அலுவலர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

இது புதிய தலைவரின் இரண்டாவது பாதீடு சமர்ப்பித்தலாக அமைந்திருந்தது.

சபையின் சொந்த வருமானம் அத்துடன் அரச துறைகளுக்கூடாக கிடைகின்ற மானியங்கள் ஒதுக்கீடுகள் உள்ளடங்கலாக சுமார் 164 மில்லியன் ரூபாவுக்கான பாதீடு சபைத் தலைவரால் சமர்ப்பிக்கப்பட்டது.
ஏறாவூர் நகர சபையில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி; இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சுயேட்சை குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் ஆசனங்களைப் பெற்றுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :