சுகாதாரஅமைச்சின் செயலாளர் முனசிங்க மற்றும் பணிப்பாளர்நாயகம் அசேல விஜயம்!
வி.ரி.சகாதேவராஜா-கல்முனை ஆதாரவைத்தியசாலையில் பாரிசவாத சிகிச்சைநிலையம் சுகாதாரஅமைச்சின் செயலாளர் டாக்டர் எச்.எம்.முனசிங்க மற்றும் சுகாதாரஅமைச்சின் சுகாதாரசேவைகள் பணிப்பாளர்நாயகம் டாக்டர் அசேல குணவர்த்தன ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.
கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையிலான வைத்தியசாலை நிருவாகம் அதிதிகளுக்கு பாரிய வரவேற்பளித்தது.
இந்நிகழ்வு நேற்றுமுன்தினம்(19)மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுகாதாரஅமைச்சின் மேலதிகசெயலாளர் டாக்டத் லால் பனாப்பிட்டிய, திட்டமிடல் பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டாக்டர் சதாசிவம் சிறிதரன், மருத்துவசேவைகள் பிரதிசுகதாதாரசேவைப்பணிப்பாளர் நாயகம் டாக்டர் சுதத் தர்மரெட்ண ,கட்டடங்கள் பிரதிசுகாதாரசேவைப்பணிப்பாளர் நாயகம் எந்திரி திசேரபெரேரா மற்றும் கிழக்குமாகாண சுகாதாரஅமைச்'சின் செயலாளர் எ.எம்.அன்சார், கிழக்குமாகாண சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் எ.ஆ.எம்.தௌபீக், கல்முகைப்பிராந்தியசுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
திறப்புவிழாவின்பின்னர் வைத்தியசாலைகேட்போர்கூடத்தில் கூட்டமொன்றும் இடம்பெற்றது.
வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் வரவேற்புரையாற்றுகையில்: 200ஆண்டுகள் பழமைவாய்ந்த எமதுவைத்தியசாலைக்கு இலங்கையின் சுகாதாரத்துறையின் உச்சக்கட்ட அதிகாரிகள் வருகைதந்திருப்பதையிட்டு நானும் எமது வைத்தியாசலை ஊழியர்களும் அகமகிழ்வடைகிறோம்.அவர்களுக்கு நன்றிகள். இங்கு பல புதிய பிரிவுகள் உருவாக்கப்பட்டு எமது வைத்தியநிபுணர்கள் வைத்தியர்கள் ஊழியர்களின் அர்ப்பணி;ப்பான சேவையினால் இம்முறை தேசிய உற்பத்திதிறன்விருதில் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி.அதற்காக எனது ஊழியர்களின் அர்ப்பணிப்பான சேவைக்கு தலைவணங்குகிறேன். இப்பிராந்திய மக்களுக்கு உச்சக்கட்ட சுகாதாரசேவையினை வழங்கவேண்டும் என்ற முனைப்புடன் செயற்பட்டுவரும் எமக்கு உயரதிகாரிகளின்வருகை பெரும் உற்சாகத்தையும் உந்துசக்தியையும் அளிக்கின்றது.அதேவேளை சுகாதார அமைச்சினால் எமக்கு நல்கும் உதவிகளுக்கு எமது மக்கள் சார்பில் உளப்பூர்வமான நன்றிகளைத்தொவித்துக்கொள்கிறேன் என்றார்.
அவசரசிகிச்சைப்பிரிவு பொறுப்பு வைத்தியஅதிகாரி டாக்டர் பா.சுரேஸ்குமார் இதுவரை வழங்கப்பட்டுவந்த பாரிசவாத சேவை பற்றி காணொளி ஊடாக விளக்கவுரையாற்றினார். பாரிசவத சிகிச்சை நிலையத்திற்குப் பொறுப்பான பிரபல மருத்துவநிபுணர் டாக்டர் இ.இதயகுமார் உடனிருந்து நெறிப்படுத்தினார்.
சுகாதாரசேவைகள் பணிப்பாளர்நாயகம் டாக்டர் அசேல குணவர்த்தன பேசுகையில்: இவ்வைத்தியசாலை உற்றபத்திதிறன் விருதில் இரண்டாம் இடம்பெற்றமை பாராட்டுக்குரியது. அத்தியட்சகர் முரளீஸ்வரன் தலைமையிலான வைத்தியசாலை குழுவிளரைப்பாராட்டுகிறேன். நல்லதொரு சுகாதார சேவையினை இவ்வவைத்தியசாலை செய்துவருவதை நானறிவேன்.கொழும்பில்தான் பாரிசவாத சிகிச்சைகள் சிறப்பு எனக்கருதுகின்ற இக்காலகட்டத்தில் கல்முனையில் இத்தகையதொரு பிரிவை ஸ்தாபித்து சிறப்பான சேவையாற்றிவருவதென்பது பாராட்டுக்குரியது.பாராட்டுக்கள் என்றார்.
சுகாதாரஅமைச்சின் செயலாளர் டாக்டர் எச்.எம்.முனசிங்க பேசுகையில்: நான் படந்த 2004 சுனாமிஅனர்hத் காலகட்டத்தில் இவ்வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தேன். அப்போதே நல்ல திருப்தியான சுகாதாரசேவையினை இவ்வவைத்தியசாலை இப்பிராந்தியமக்களுக்கு செய்ததை நானறிவேன்;. அதைவிட இன்று பலவழிகளாலும் முன்னேற்றம்கண்டு அதிசிறப்பான சுகாதாரசேவையினை வழங்குவதையிட்டு பெருமையாகவிருக்கிறது. அத்தியட்சகர் முரளீஸ்வரன் சிறந்ததொரு ஆளுமையுள்ள நிருவாகி. அவர்தம் ஊழியர்களை சிறந்தமுறையில் வழிநடாத்தி மக்களுக்கான அர்பப்ணிப்புடன் சுகாதார பராபமரிப்புச்சேவைiயினை வழங்குவதையிட்டு பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் என்றார்.
நன்றியுரையினை பிரதிவைத்தியஅதிதியட்சகர் வைத்தியஅதிகாரி டாக்டர் சோ.திருமால் நிகழ்த்தினார்.
களுவாஞ்சிக்குடி தொடக்கம் பாணமை ஈறாகவுள்ள பிரதேச மக்களுக்கு இப்பாரிசவாத சிகிச்சைநிலையம் பெரும் வரப்பிரசாதமாகஅமையவுள்ளமை குறிபிபிடத்தக்கது.
0 comments :
Post a Comment