கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் (தேசிய பாடசாலை) சேவையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற, மற்றும் 2021 இல் ஓய்வு பெற்றுச் சென்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை ஆசிரியர் சங்க ஏற்பாட்டில் அதிபர் யூ.எல்.எம். அமீன் தலைமையில் பாடசாலையின் பிரதான கேட்போர் மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவநேந்திரன் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக கல்முனை வலய கல்வி அலுவலக கணக்காளர் வை. ஹபீபுள்ளா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜிஹானா ஆலிப், கல்முனை வலய கல்வி அலுவலக பொறியியலாளர் ஏ.எம்.ஷாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு அதிதிகளாக பிரதி அதிபர்களான திருமதி எஸ்.எஸ்.எம்.மசூது லெவ்வை, ஆர்.எம். அஸ்மி காரியப்பர், உதவி அதிபர் ஏ.எச்.நதீரா உட்பட பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகஸ்தர்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment