இயேசு கிறிஸ்துவின் பிறப்பு சமாதானத்தைக் கொண்டு வந்தது.- அதி வண.பிதா சத்ரு பெர்னாண்டோ



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
யேசு கிறிஸ்துவின் பிறப்பு, இவ்வுலகிற்கு மீட்ப்பை மட்டுமல்ல, சந்தோஷத்தையும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் சேர்த்தே கொண்டு வந்துள்ளது என்பதை இந்நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகார இணைப்புச் செயலாளரும் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் சர்வதேசத் தலைவர்களின் ஒருங்கிணைப்பாளருமான அதி வண.பிதா கலாநிதி எஸ்.சத்ரு பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும்,

விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்த தேவ சுதானாம் கிறிஸ்துவின் பிறப்பை மட்டுமல்ல, அவர் போதனைகளையும் இந்நாட்களில் நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டும். உன்னை அன்பு கூறுவது போல, பிறரையும் அன்பு கூறுவாயாக! எனும் அவரது தன்னலமற்ற சிந்தனை நமக்குள்ளும் இந்நாட்களில் பெருக வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்.

2000 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பூவுலகில் வந்துதித்த உலக மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை இன்றும் கொண்டாடி மகிழ்கின்ற அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியும் சமாதானமும் ஆரோக்கியமும் நிறைந்த நன்நாட்களை கொண்டுவரும் இனிய நத்தார் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்குண்டு தவிக்கும் இப்பூமி மாந்தரை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே விடுவிக்க வேண்டும் என விசுவாசித்து, தொடர்ந்தும் ஜெபங்களை ஏறெடுப்போமாக!

குறிப்பாக சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, இவ் விழா காலத்தை இனிதே கொண்டாட உங்களை அறிவுறுத்தி வாழ்த்துகிறேன்.

இயேசு கிறிஸ்துவின் அன்பும், இரக்கமும், சமாதானமும், சந்தோஷமும் உங்கள் அனைவருடனும் இருப்பதாக! என தெரிவிக்கப்பட்டுள்ளது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :