கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச ஈரான் நாட்டின் கைத்தொழில் பிரதி அமைச்சரை Allirezce Peymanpak கொழும்பில் உள்ள கைத்தொழில் அமைச்சில் வைத்து 23.12.2021 சந்தித்தாா். இச் சந்திப்பின்போது இலங்கை -ஈரான் நாடுகளுக்கிடையிலான கைத்தொழில் வா்த்தகம் சம்பந்தமாக கலந்துரையாடினார்கள்.
இலங்கை - ஈரானின் நீண்ட கால நட்பு நாடு என்ற வகையில், சர்வதேச ரீதியில் எப்போதும் சவாலுக்கு உள்ளான இலங்கைக்கு நட்பு கரம் நீட்டுவதற்கும், இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்கான ஈரானின் முன்மொழிவுகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மக்கள் ஈரானுக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சா் விமல், ஈரான் நாட்டின் அமைச்சாிடம் தெரிவித்தாா். இலங்கையில் உற்பத்திகளையும் இலங்கையின் கைத்தொழில்களை செயற்திட்டங்களை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்னெடுத்துச் செல்ல தாம் தயாராக இருப்பதாகவும் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச ஈரான் நாட்டின் பிரதியமைச்சரிடம் தெரிவித்துள்ளார். இச் சந்திப்பின்போது ஈாரான் நாட்டின் துாதுவா் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனா்.
0 comments :
Post a Comment