காட்டுயானை மதங்கொண்டு தாக்கியதில் காட்டுமடு இளம் விவசாயி ஒருவர் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்திலுள்ள கோமாரியையடுத்துள்ள காட்டுமடு எனும் வயற்பிரதேசத்தில் நேற்று(3)அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கொல்லப்பட்டவர் ஆலையடிவேம்பு கண்ணகிபுரத்தைச் சேர்ந்த து.கஜேந்திரன்(வயது24) இளம் விவசாயி என அடையாளம் காணப்படிருக்கிறது. திருமணமாகாத அவர் தினமும் வயற்காவலுக்காக கோமாரி சென்று வருபவர்.
நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கோமாரிப்பிரதேசத்திற்கான பொத்துவில் பிரதேசசபை உறுப்பினர் த.சுபோதரன் சம்பவத்தையறிந்து கிராமசேவையாளருக்கு அறிவித்துவிட்டு, ஸ்தலத்திற்கு விரைந்து ஆகவேண்டிய வேலைகளைக் கவனித்தார்.
சடலம் பொத்துவில் ஆதாரவைத்தியசாலைக்கு பிரேதபரிசேதனைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளது.பொத்துவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை நடாத்திவருகின்றனர்.
0 comments :
Post a Comment