தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அரசடித்தீவு சக்தி மகளிர் இல்லத்திற்கு தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இவை வழங்கி வைக்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் உத்தியோகபூர்வ செயலாளரும், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் முகாமையாளருமான மதிமேனனினால் இவை வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி கிளையின் பட்டிரிப்புத் தொகுதியின் தலைவர் பா. அரியநேந்திரன், பட்டிருப்பு தொகுதியின் பொருளாளர் நடராஜா, பட்டிப்பளை தமிழரசுக்கட்சி கிளையின் தலைவர் நேசதுரை மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் புஸ்பலிங்கம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment