அக்கரைப்பற்று பிரதேச சபையின் மாதாந்த பொதுச்சபை அமர்வு இன்று (02) அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக் தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்ற போது பிரதேச சபையின் 2022 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பொதுச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஏகமானதாய் அங்கீகரிக்கப்பட்டது.
தேசிய காங்கிரசின் சார்பில் தவிசாளர், உப தவிசாளர் அடங்களாக ஐந்து உறுப்பினர்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இரண்டு உறுப்பினர்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் ஒரு உறுப்பினருமாக மொத்தம் 08 உறுப்பினர்களை கொண்டுள்ள இந்த சபையின் வரவு செலவுத்திட்டம் இம்முறையும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment