பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து மலையகத்தில் பல பாகங்களில் பல்வேறு விழிப்புணர்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைவாக பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் வன்புணர்வுகளை நிறுத்துவோம் எனும் தொனிப்பொருளில் புரொடெக்ட் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வுகள் நோர்வூட் நகரில் 05.12.2021 அன்று இடம்பெற்றது.
பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பான புரொடெக்ட் .அமைப்பின் தலைவி கருப்பையா மைதிலி தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் நோர்வூட் நகரில் வீதி நாடகமும், விழிப்புணர்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அரச சார்பற்ற அதிகாரிகள், சிவில் அமைப்பினர், உட்பட புரொடெக்ட் .அமைப்பின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பெண்கள், சிறார்கள் என பலரும் கொண்டனர்.
0 comments :
Post a Comment