முஸ்லிம் எயிட் யூகே அரசசார்பற்ற நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி காசிப் சபீர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாடிகோராளவை மாவட்ட செயலகத்தில் செவ்வாய்கிழமை(30) சந்தித்தார்.
முஸ்லிம் எய்ட் நிறுவனமானது பல நாடுகள் உட்பட இலங்கையிலும் தன்னுடைய வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருவதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்நிறுவனத்தின் செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தமது நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற வேலை திட்டங்களுக்கு வழங்குகின்ற ஒத்துழைப்பை இதன் போது பிரதம நிறைவேற்று அதிகாரி பெரிதும் பாராட்டினார்.
திருகோணமலை மாவட்டம் மூவின மக்களையும் கொண்டதாகவும் சுமூகமான முறையில் மக்கள் வாழக்கூடிய ஒரு மாவட்டமாக உள்ளது. கல்வி உட்பட முக்கியமான சில துறைகளில் மாவட்டம் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. எனவே மாவட்டத்தை முன்னேற்றுவதற்கு தேவையான ஒத்துழைப்பு அவசியம் என்றும் இளைஞர் யுவதிகளின் வேலையின்மை பிரச்சினைக்கு தீர்வாக பொருத்தமான தொழில் பயிற்சிகளை வழங்கி அவர்களை நாட்டினுடைய அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யக்கூடியவர்களாக மாற்றி அமைப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு அரசாங்க அதிபர் இதன்போது வேண்டிக்கொண்டார்.
தமது நிறுவனமானது மாவட்டத்தில் இளைஞர் யுவதிகளின் திறன் அபிவிருத்தி தொடர்பான விருத்திக்கு தேவையான முயற்சிகளை தொடர்ச்சியாக வழங்க உள்ளதாக இதன்போது பிரதம நிறைவேற்றதிகாரி அரசாங்க அதிபரிடம் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான நிகழ்ச்சித்திட்ட தலைமை அதிகாரி அபு ஆகில், நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஏ.சி் பைசர்கான், நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி. சலீம் உட்பட ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment