33 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் கபடி போட்டியில் தேசிய மட்ட சம்பியனாக அம்பாறை மாவட்ட நிந்தவூர் மதீனா இளைஞர்கழக கபடி அணி வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களது வெற்றி மூலம் தேசிய ரீதியில் அம்பாறை மாவட்டத்திற்க்கும் நிந்தவூர் பிரதேசத்துக்கு பெருமைசேர்த்துள்ளனர் .
கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் கடந்த திங்கள்கிழமை (20) நடைபெற்ற கபடிபோட்டியில் வெற்றி பெற்று சாம்பியனாக முடி சூடிக் கொண்டனர் .
இப்போட்டியில் பங்கு பற்றி தேசிய சம்பியனாக வெற்றியிட்டிய நிந்தவூர் மதீனா இளைஞர் கழக கபடி வீரர்களுக்கு தங்கப்பதக்கம், வெற்றி கிண்ணம், சான்றிதழ் மற்றும் பணப் பரிசுகள் இதன் போதுவழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இப்போட்டியில் சிறந்த ஆட்ட வீரராக (BEST PLAYER) நிந்தவூர் மதினா இளைஞர் கழகத்தின் கபடிவீரரும் ,தேசிய கனிஷ்ட கபடி அணி வீரருமாகிய எஸ். எம் . சபிஹான் தெரிவு செய்யப்பட்டதுடன் குழு நிலை போட்டிகளில் இவர் சிறந்த வீரருக்கான விருது பெறும் முதலாவது சந்தர்ப்பம்இதுவாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .
குறித்த விளையாட்டு கழக கபடி அணி வீரர்கள் அண்மையில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தினால் இடம்பெற்ற விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு முதலிடம்பெறறிருந்து தேசிய ரீதியில் இடம்பெற்ற போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் குறித்த தேசிய கபடி போட்டியில்சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மேலும் இவ் வெற்றியை பெறுவதற்கு முழு மூச்சாக அணியை வழி நடாத்தி உதவி புரிந்த அனைவருக்கும் நிந்தவூர் மதினா இளைஞர் விளையாட்டு கழகத்தினர் தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர் .
0 comments :
Post a Comment