ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் சுமார் 325 மில்லியன் ரூபா செலவில் இந்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது
மேலும் கருத்து தெரிவிக்கையில் கௌரவ வாசுதேவ நாணயக்கார அவர்கள்
இந்த கெப்ரக வாகனங்கள் நீர் தாங்கி மோட்டார் மற்றும் நீர் வினியோக குழாய் உள்ளிட்ட பல வசதிகளை கொண்டுள்ளது இதன் காரணமாக மாவட்டத்தில் எச்சந்தர்ப்பத்திலும் மிக விரைவாக பராமரிப்பு மற்றும் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்
இந்த வாகனங்களை பல சிரமங்களுக்கு மத்தியில் எமக்கு பெற்றுக்கொடுத்தமைக்காக வேண்டி ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் அதன் நிர்வாகிகளுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்
இந்நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவர் சட்டத்தரணி நிமல் ஆர் ரணவக, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சரத் ஆர் ரணசிங்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மேலதிக பொது முகாமையாளர் கிர்ஷான் பிர்னாந்து அமைச்சரின் இணைப்பு செயலாளர் டி.வி ஞி. திலகசிரி மற்றும் ஏ.கே.கபுருகே எஸ்.ஏ. ரசித் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்
0 comments :
Post a Comment