17வது தேசிய வுஷு (Wushu) சாம்பியன்ஷிப்ஸ் போட்டிகளின் 60 கிலோ கிராம் ஆண்களுக்கான ஸன்டா (Sanda) போட்டியில் M.M.ரிம்ஸி மொஹமட் (சின்சி) மூன்றாமிடத்தை வென்று வெண்கல பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.
இலங்கை வுஷு சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த போட்டிகள், கடந்த 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் இரத்தினபுரியில் நடைபெற்றது. விளையாட்டு மைதானத்தின் உள்ளக அரங்கில் நடைபெற்றது.
M.M.ரிம்ஸி மொஹமட், கம்பஹா மாவட்டம், கஹட்டோவிட்டவை சேர்ந்த M.S.M.முனாஸின் புதல்வர் என்பதுடன், அவர் பயிற்சியாளர் M.I.M.முஆத் இடம் பயிற்சி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment