2023ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நான் களமிறங்குவேனா? இல்லையா? என்பது தெரியாது! சம்பிக்க ரணவக்க



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
2023ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நான் களமிறங்குவேனா? இல்லையா? என்பது தெரியாது. களமிறங்கினாலும் இறங்காவிட்டாலும் நான் இனவாதி இல்லை. நான் சரித்திர பூர்வமாக இனவாதத்தையும் தீவிரவாதத்தையும் எதிர்ப்பவன் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேலும் கருத்து தெரிவிக்கையில்:-

என்னைப் பற்றிய விமர்சனங்கள் குறித்து ஜனநாயகத்தை விரும்பும் தமிழ் மக்களுடன் விவாதிக்க விரும்புகின்றேன்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மின்சார வசதியை பெற்றுக் கொடுக்க முழு முயற்சி எடுத்தது நான் தான். மலையக மக்களுடைய குடியிருப்புகளுக்கு மின்சார வசதியை பெற்றுக் கொடுத்தது நான் மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் போது தான்.

நான் மாநகரசபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட போது கொழும்பு நகருக்குள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை வழங்கியபோது தமிழ் முஸ்லிம் மக்கள் என்ற எந்த வித பாகுபாடும் காட்டவில்லை.

கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய விடயங்களை மறக்க முடியாவிட்டாலும் மறந்து அதற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும்.

புலம்பெயர்ந்தவர்கள் எம்முடன் மீண்டும் இணைந்து கைகோர்க்க வேண்டும். கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய விடயங்களை மறக்க முடியாவிட்டாலும் மறந்து அதற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கொழும்பு மற்றும் காலி போன்ற நகரங்களைப் போன்று யாழ். நகரத்தையும் நவீனமயமாக மாற்றுவதற்கு நான் அமைச்சராகவிருந்த போது பல கோடி ரூபா செலவில் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தேன். குறிப்பாக தூர இடங்களுக்கான பஸ் தரிப்பு நிலையம், யாழ்ப்பாண மாநகர சபைக்கான புதிய கட்டடத் தொகுதி உள்ளிட்ட பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது அவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதற்கு நிதியொதுக்கீடுகள் அனைத்தும் இந்த அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டுள்ளன.
ஏன் இவ்வாறு அரசாங்கம் செய்கின்றதென தெரியவில்லை. அரசியல் பழிவாங்கலுக்காகவே இவ்வாறு அரசாங்கம் நடந்து
கொள்கின்றதென நினைக்கிறேன்.
இவ்வாறான நிலையில் நான் யாழ்ப்பாணத்திலிருந்து இந்த அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன்.

ராஜபக்சக்கள் தமது பெயர் குறிப்பிடப்படும் அபிவிருத்தி திட்டங்களை மாத்திரமே மேற்கொள்வார்களே தவிர மக்கள் நலன் சார்ந்து செயற்படமாட்டார்கள் என்பதே உண்மையானது. அதாவது தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கி மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்குமாறு கோருகின்றேன்.
சிங்கள மக்கள் பெருவாரியான வாக்குகளை தற்போதைய ஜனாதிபதி கோட்டபாயவுக்கு வழங்கியிருந்தார்கள். ஆனாலும் தற்போது அதே சிங்கள மக்கள் அவரை வெறுக்கின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலில் 2023ம் ஆண்டு இடம் பெறும். அந்த நேரத்தில் நேர்மையான துஷ்பிரயோகத்திற்கு எதிராக செயற்படுகின்ற ஒருவர் வேட்பாளராக களமிறக்கப்படுவார்.

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் சொல்வதைத் தான் செய்வோம் செய்வதைத் தான் சொல்வோம் எங்களுடன் நீங்களும் கைகோர்க்க வேண்டும். 43 படையணியை நீங்கள் படையணியாக கருதக்கூடாது எதிர்காலத்தில் அரசியலில் வியூகங்களை வகுக்க உருவாக்கப்பட்ட அமைப்பே இதுவாகும்.1943 இல் நமக்கு கிடைத்த இலவசக் கல்வியை அடிப்படையாக கொண்டு 43 படையணி இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆகவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல எம்முடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றார்.

யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தவன் நான். நான் ஒரு இனவாதியாக இருந்தால் இது போன்ற செயல்களை செய்திருப்பேனா? நான் எதிர் வரும் ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடுவேனா? இல்லையா? என்பது வேறு கதை. ஆனால் நிச்சயமாக நான் மத வாதியும் இல்லை. இனவாதியும் இல்லை. நான் ஒரு ஜனநாயகவாதி. திறமைசாலிகளை மதிக்கிறவன். 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு காலம் இருக்கிறது எல்லோருடனும் கலந்துரையாடி சரியான நேரத்தில் சரியான வேட்பாளர் களமிறக்கப்படுவார் என சம்பிக்க தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :