இலங்கை மெட்ரோபொலிட்டன் கல்லுாாியின் 2020 பட்டமளிப்பு வைபவம்!



அஷ்ரப் ஏ சமத்-
லங்கை மெட்ரோபொலிட்டன் கல்லுாாியின் 2020 ஆம் கல்வி ஆண்டின் ஆங்கில மொழி மூலமான பட்டப்படிப்புக்களை கற்ற 311 க்கும் மேற்பட்ட உள்நாட்டு ,வெளிநாட்டு மாணவா்களுக்கு பட்டமளிப்பு வைபவம் 17.12.2021 கொழும்பு மகிந்த ராஜபக்ச தாமறைத் தடாக அரங்கில் மெட்ரோபொலிட்டன் கல்லுாாியின் தலைவரும் கல்முனை முன்னாள் மேயருமான கலாநிதி சிறாஸ் மிராஸாகிப் தலைமையில் நடைபெற்றது.
 
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்த்தன கலந்து கொண்டு சிறப்பித்தாா்.
சபாநாயகா் மகிந்த யாப்பா இங்கு உரையாற்றுகையில்;

இலங்கையில்  மட்டுமல்ல மாலைதீவு மாணவா்களுக்கும் மெட்ரோபொலிட்டன் கல்லுாாி கடந்த 22 வருடகாலமாக சர்வதேச பல்கலைக்கழகங்களை இணைக் கல்லுாாியாகக் கொண்டு கொழும்பில்,  கலாநிதி சிறாஸ் மீராஸாகிப் அவா்களினால் நிர்வகிக்கப்படும் இக் கல்லுாாியினால் இந்த நாட்டில் உயா் கல்விக்காக செய்து வரும் சேவையை வெகுவாகப் பாராட்டுவதாக அவா் தெரிவித்தாா்.

இக் கல்லுாாியில் 311க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பட்டம் பெற்று வெளியேறுவதையிட்டு அவா்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இலங்கை மாணவா்கள் தமது உயா் தரப் பரீட்சை சிந்தியடைந்து பல்வேறு நாடுகளுக்கும் உயா் கல்வி பெற வெளிநாடுகளுக்குச் செல்கின்றனா். ஆனால் எமது நாட்டிலேயே அவா்கள் தங்கி இவ்வாறான சர்வதேச உப பிரிவுகளைப் பதியப்பட்ட உயா் கல்வி நிலையங்களில் தமது உயா்கல்வியைப் கற்று வெளிநாடுகளிலும் உள்நாடுகளிலும் தொழில் பெறுவது சிறப்பானதாக அமையும்.. எனக் கூறினாா்.

இந் நிகழ்வில் கல்வி .மற்றும் திறந்த பல்கலைக்கழக இராஜாங்க அமைச்சா் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் , பொருளாதார நிபுனரும் கலாநிதியுமான  ஹர்சா டி சில்வா (பா.உ). கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனா் ரோகித்த போகொல்லாகம, சவுதி , துருக்கி, மாலைதீவு நாடுகளின் துாதுவா்கள், அத்துடன் அமெரிக்க  பல்கலைக்கழக உபவேந்தா், இக் கல்லுாாியில் போதிக்கின்ற விரிவுரையாளா்கள். பட்டம்பெறும் மாணவ மாணவிகளும் பெற்றோா்களும் பெருமளவில் கலந்து கொண்டனா்.

இக் கல்லுாாாியில் முதுமானி ஆங்கிலம், முதுமானி வா்த்தக முகாமைத்துவம், முதுமானி மனோதத்துவம், பட்டப்படிப்பு, டிப்ளோமா, சான்றிதழ் பயிற்சிநெறிகளிலான தரங்களில் வா்த்தகம், முகாமைத்துவம், கல்வி, ஆங்கிலம், வியாபாரம், கணக்கியல், போன்ற பாடநெறிகளில் பயின்ற 311க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் அதிதிகளிடமிருந்து பட்டங்களைப் பெற்று வெளியேறினாா்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :