12 தோட்டங்களை கொண்ட 42 பிரிவுகளை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்



க.கிஷாந்தன்-
க்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு கீழ் இயங்கும் 12 தோட்டங்களை கொண்ட 42 பிரிவுகளை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் இன்று (13.12.2021) தொழிலுக்குச் செல்லாமல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு கட்சி பேதமின்றி அணைவரும் ஒத்துழைப்பு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் சம்பளம் பாரிய பிரச்சினையாக இருப்பதாகவும், தற்போது தேயிலை மலைகள் காடாகி கிடப்பதால் 20 கிலோ கொழுந்து பறிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தே பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அத்தோடு, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களே வேலை வழங்குவதனால் பெரும் சிரமத்திற்கு மத்தியில் நிம்மதியற்று வாழ்ந்து வருகின்றோம்.

பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் தமக்கு சாதகமான பதிலை பெற்றுத் தருமாறு கோரியும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க கூட்டு ஒப்பந்தம் கட்டாயமாக வேண்டும் என வலியுறுத்தியும், தோட்டத் தொழிலாளர்கள் இந்த பணி பகிஷ்கரிப்பை முன்னெடுத்ததாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு தேயிலை தொழிற்சாலைகளும் மூடப்பட்டு தொழிற்சாலை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :