ஒவ்வொரு வருடமும் சமுர்த்தி திணைக்களத்தினால் சமுர்த்தி பெறும் பயனாளிகளின் நன்மைகருதி சமுர்த்தி லொத்தர் சீட்டிழுப்பினூடாக தெரிவு செய்யப்படும் அதிஷ்டசாலிகளுக்கு வீடு நிர்மானிப்பதற்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் இவ்வருடம் இறக்காமம் பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் சமுர்த்தி லொத்தர் சீட்டிழுப்பின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட அதிஷ்டசாலிகளுக்கு இறக்காமம் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ. அஹமட் நஸீல் தலைமையில் சமுர்த்தி லொத்தர் காசோலைகள் கடந்த வெள்ளிக் கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
சமுர்த்தி வங்கியினுடாக தொழில் முயற்சி கடன் வழங்கல், சமுர்த்தி லொத்தர் வீடமைப்பு கடன் உதவி, லொத்தர் மூலமாக வெற்றி பெற்றவர்களுக்கான காசோலை வழங்கல் போன்ற திட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் எம்.சி.எம் தஸ்லீம், சமுர்த்தி திட்ட முகாமையாளர் பிரியந்தி வேரகொட, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. சதாத், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.யாகூப் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment