கட்டுவன்வில பிரதேசத்திற்கு ஜனாஸா வாகனம்!



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
பொலநறுவை மாவட்டத்தின் கட்டுவன்வில பிரதேசத்தின் மிக நீண்டநாள் தேவையாக கருதப்பட்ட ஜனாஸா வாகனம் கட்டுவன்வில நற்பணி மன்றத்தின் முயற்சியினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது.

நற்பணி மன்றத்தின் தலைவர் பி.கே.அசனார் (வெள்ளையன்) தலைமையில் கட்டுவன்வில ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம் பெற்ற நிகழ்வில் முன்னாள் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.அன்சார், தொழில் அதிபர் ஏ.பைஸல், சட்டத்தரணி எஸ்.பயாஸ்தீன், சந்துன்பிட்டி விகாராதிபதி, பிரதேச அனைத்து பள்ளிவாயல்களின் நிறுவாகிகள், வெலிகந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சேனபுர இராணுவ புனர்வாழ்வு முகாம் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கட்டுவன்வில நற்பணி மன்றத்தின் முயற்சியினால் பிரதேச மக்களினதும் வெளிநாட்டில் தொழில்புரியும் பிரதேச மக்களினதும் பங்களிப்புடன் கொள்முதல் செய்யப்பட்டுள்ள ஜனாஸா வாகனம் பொலநறுவை மாவட்டத்தில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனம் வெலிகந்தை பிரதேச செயலாளர் பிரிவில் கட்டுவன்வில பிரதேசத்திற்கு மாத்திரம் இல்லாமல் அதனை அன்டியுள்ள தமிழ் சிங்கள கிராம மக்களுக்கும் ஜனாஸாக்களை ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் என்று நற்பணி மன்றத்தின் தலைவர் பி.கே.அஸனார் (வெள்ளையன்) தெரிவித்தார்.

கட்டுவன்வில் பிரதேச அபிவிருத்தி கல்வி முன்னேற்றம் போன்ற வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வரும் கட்டுவன்வில் நற்பணி மன்றத்தின் தலைவர் பி.கே.அஸனார் (வெள்ளையன்) மற்றும் அதன் பொருளாலர் மௌலவி எம்.யூ.ஹயாத்து முஹம்மது ஆகியோருக்கு பிரதேச மக்கள் பொண்னாடை போர்த்தி நினைவு சின்னமும் வழங்கி கௌரவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :