ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஐந்தாவது ஆண்டு நிறைவுஎஸ்.எம்.எம்.முர்ஷித்-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பெருமையுடன் சுபீட்சத்தை நோக்கி எனும் தொனிப் பொருளில் நாடளாவிய ரீதியில் கட்சி பிரமுகர்களால் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது.
இந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்குடா தொகுதி ஏற்பாட்டாளர் எஸ்.ஏ.முஹம்மட் கலீமின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிறைந்துரைச்சேனை அல் குறைஸ் பாலர் பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.

அல் குறைஸ் பாலர் பாடசாலை தலைவர் எஸ்.எச்.புர்ஹானுதீன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்குடா தொகுதி ஏற்பாட்டாளர் எஸ்.ஏ.முஹம்மட் கலீம் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.எம்.எம்.உசனார்இ சமுக சேவையாளர் அஷ்ஷெய்க் ஏ.யூ.நளீம்இ நாவலடி றஹ்மத் பள்ளிவாயல் தலைவர் எம்.ஜெயினுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது முன்பள்ளி மற்றும் பாடசாலை மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :