மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் எந்த திட்டத்தினையும் கூட்டமைப்பு முன்னெடுக்காது - மேனன்!மிழ் தேசிய கூட்டமைப்பு என்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டத்தையே முன்னேடுக்கும், மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் எந்த திட்டத்தினையும் கூட்டமைப்பு முன்னெடுக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் உத்தியோகபூர்வ செயலாளர் மதிமேனன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால் சராவெளி பூலாக்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் கோவிலுக்கு ஒலி பெருக்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மக்களது மக்களின் கோரிக்கைக்கு அமைவாக இவை வழங்கி வைக்கப்பட்டன.
கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் வைத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் உத்தியோகபூர்வ செயலாளர் மதிமேனனினால் இவை வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட மதிமேனன், “பூலாக்காடு பிரதேசத்தில் பாலம் மிக அவசியமாக காணப்படுகின்றது. எனினும் தற்பொழுது அரசியல்வாதி ஒருவரின் தம்பி சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்டுள்ளார்.
இங்குள்ள வளங்கள் சுரண்டப்படுகின்றது. இங்குள்ள மக்களுக்கு பாலம் உட்பட பல தேவைகள் இருந்தும் அவைகள் நிவர்த்தி செயப்படாமல் இங்குள்ள வளங்கள் சுரண்டப்படுவது கவலைக்குரியது.
எது எப்படி இருந்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டத்தையே முன்னேடுக்கும், மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் எந்த திட்டத்தினையும் கூட்டமைப்பு முன்னெடுக்காது.“ எனக் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :