ஆழ்கடலுக்கு சென்று மீனவர்கள் திரும்பிய நிலையில் படகு இதுவரை இல்லைஎஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த 02ம் திகதி ஆழ்கடலுக்கு சென்ற மீன்பிடி இயந்திர படகு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், சென்றவர்கள் மூவர் மாத்திரம் திரும்பியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்தெரிவித்தனர்.

வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்துவாழைச்சேனையைச் சேர்ந்த அஜ்வத் முகம்மது சபா என்பருக்கு சொந்தமான IMULA0039MTR எனும் இலக்கமுடைய மஞ்சள்நிற அலீயா என பெயர் இடப்பட்ட மீன்பிடி இயந்திர படகுடன், வாழைச்சேனை மற்றும் பிறைந்துறையைச்சேர்ந்த மூன்று மீனவ தொழிலாளர்களுடன் வாரத்துக்கு தரித்து மீன் பிடிக்க கடந்த 02ம் திகதிஆழ்கடலுக்கு சென்றனர்.

ஆனால் கடந்த 09ம் திகதி அதிகாலையில்படகின் இயந்திர கோலாறு காரணமாகவும், அவ்வேளை நிலவிய கடல் கொந்தழிப்பினாலும் ஊர்செல்வதற்கு வருகை தந்த ஒரு படகின் உதவியுடன் படகினை எடுத்து வர முயற்சித்தும் பயனளிக்காமையினால்மீனவ தொழிலாளர்கள் மூவரும் தங்களின் உயிரை காப்பாற்றிக் கொண்டு வாழைச்சேனைக்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில் மீன்பிடி இயந்திர படகும்,அதன் மீன்பிடி வலை மற்றும் உபகரணங்களும் கடல் நீர் அடித்து செல்லப்பட்டுள்ளதுடன், இதனைதேடும் பணியில் ஈடுபட்டும் இன்னும் கிடைக்கவில்லை என்றும், இது தொடர்பில் படகுஉரிமையாளரினால் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே குறித்த படகினை யாரும் மீனவர்கள்கண்டு கொண்டால் உடனடியாக படகின் உரிமையாளராக வாழைச்சேனையைச் சேர்ந்த அஜ்வத் முகம்மதுசபா என்பவரின் 0770556385 அல்லது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் 0652257709 என்றஇலக்கத்துக்கு அறியத் தருமாறு வாழைச்சேனை பொலிஸார் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :