கிண்ணியா குறிஞ்சாக்கேணிக்கு செல்வதற்கான படகுச் சேவை இன்று (26) ஆரம்பித்து வைக்கப் பட்டது.
கடந்த (23 )ஆம் திகதி படகு கவிழ்ந்து 6 உயிர்கள் காவு கொள்ளப் பட்டதையடுத்து, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் பணிப்புரையின் பேரில் கடற் படையினரால் படகுச் சேவை முன்னெடுக்கப் பட்டு வருகின்றது.
இந்த படகில் இருக்கையில் அமர்ந்து 25 பேர் பாதுகாப்பு அங்கி வசதிகளுடன் பயணிக்க முடியும்.
இப் பாலம் நிர்மாணிக்கப் பட்டு முடியும் வரை ,இப் படகுச் சேவை இடம் பெறவுள்ளதாக தெரிய வருகிறது.
இப் படகுச் சேவை கடற்படையினரால் முற்றிலும் இலவசமாக இடம் பெறவுள்ளமை குறிப்பிடத் தக்கது.
0 comments :
Post a Comment