நாளை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142 ஆவது குருபூஜை நிகழ்வு



வி.ரி.சகாதேவராஜா-
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142 ஆவது குருபூஜை நிகழ்வை, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நாளை(27)சனிக்கிழமை நாடளாவிய ரீதியிலே அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.

விசேடமாக கொழும்பு, அம்பாறை ,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பிரதானமாக முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளோடு, வடக்கு கிழக்கு மலையகம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூஜை நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது என இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.

கொழும்பில்...
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் விழாவும் குருபூஜையும் சேர்ந்த நிகழ்வாக நாளை 27 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம் அகில இலங்கை இந்துமாமன்றம் இந்து வித்தியா விருத்திச் சங்கம் இலங்கை சைவ நெறிக் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு கொழும்பு - பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வின் விசேட அம்சமாக கனடா சைவ சித்தாந்த பீட இயக்குநர் சைவ சித்தாந்த அறிஞர் வைத்திய கலாநிதி இ.லம்போதரனின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் தொடர்பான சிறப்புரை நிகழ்வும் ஏற்பாடாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில்..
யாழ்ப்பாணத்தில், நாவலர் பிறந்த நல்லூரில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்திலும் காலை 8.00 மணிக்கு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூஜை நிகழ்வு இடம்பெறவுள்ளது.
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் இரண்டாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் அவர்களின் ஆசியுரை தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமாகிய செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்க சைவப்புலவர் ஏ.அனுசாந்தன் அவர்களின் 'நாவலர் பெருமானின் வாக்கும் வாழ்வும்' என்ற தலைப்பிலான சிறப்புரையோடும் தெல்லிப்பளை பன்னாலை கணேசா அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளோடும் இடம்பெறவுள்ளது.

அம்பாறையில்...
காரைதீவு சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில் , பிரதேச செயலாளர் சி.ஜெகராஜன் தலைமையில் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக் குருக்கள் திருமுன்னிலை வகிக்க அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்க மாணவர்களின் கலை நிகழ்வுகளோடு சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

சைவத் தமிழர்களுக்கென்று ஒரு மதிப்புமிகு அடையாளம் தந்தவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான். பல்துறை ஆளுமை மிக்க தீர்க்கதரிசனப் பார்வை கொண்ட பெருமகனார் நமக்காகச் செய்த அரும்பணி சைவத் தமிழுலகம் என்ன கைம்மாறு செய்தாலும் ஈடாகாது என இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :