நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பில் பெண்கள் இஜ்திமா, பரமக்குடி நேரு நகர் அன்வாருல் ஹுதா ஜூம்மா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பரமக்குடி தாலுகா தலைவி பதுகுல் பானு தலைமை தாங்கினார்.பரமக்குடி வட்டார பெண்கள் மதரசா நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சகோதரி நபிஷா கிரா அத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். தாலுகா செயலாளர் சித்தி ரைஹானா அனைவரையும் வரவேற்றார்
மாவட்ட தலைவி சுமையா நஸ்ரின், மாவட்ட பேச்சாளர் அஃபிஃபா யாஸ்மீன் , விம் மாவட்ட துணைத்தலைவி ஜரினா பேகம் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை நிகழ்த்தினர். இறுதியாக தாலுகா குழு உறுப்பினர் முஜிபு நிஷா நன்றி கூறினார். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment