கடந்த 40 வருடங்களாக இயங்கிவரும் சாய்ந்தமருது பிளைங் கோர்ஸ் விளையாட்டு கழக டெஸ்ட் மற்றும் ஒருநாள், டீ-20 போட்டிகளுக்கான கழக சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்வு சாய்ந்தமருது பிளைங் கோர்ஸ் விளையாட்டு கழக ஆயுள்கால செயலாளர் கானின் நெறிப்படுத்தலில் ஓய்வுபெற்ற அதிபரும், சாய்ந்தமருது பிளைங் கோர்ஸ் விளையாட்டு கழக தலைவருமான ஐ.எல்.எம். மஜீத் தலைமையில் சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஜலால் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இணைந்த வடகிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான முழக்கம் ஏ.எல். அப்துல் மஜீத், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் றஸாக், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எச்.எம்.அப்துல் மனாப், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன தலைவரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வை. ஹலிலுர் ரஹ்மான், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ. வஸீர், பிராந்திய பாடசாலைகளின் அதிபர்கள், கல்விமான்கள், விளையாட்டு கழகங்களின் நிர்வாகிகள், சிரேஷ்ட விளையாட்டு வீரர்கள், பிளைங் கோர்ஸ் விளையாட்டு கழக நிர்வாகிகள், வீரர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment