சாய்தமருதில் பீ . சீ. ஆர் மற்றும் அண்டிஜன் பரிசோதனை முன்னெடுப்பு !எம். என். எம். அப்ராஸ்-
கொரொனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகாமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் பீ . சீ. ஆர் மற்றும் அண்டிஜன் பரிசோதனைகள் இன்று (08) முன்னெடுக்கபட்டிருந்தது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணனின் வழிகாட்டலில் சாய்நதமருதுசுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் டாக்டர் யூ.எல்.எம்.நியாஸ் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதாரபரிசோதகர் ஜே. நிஸ்தார் , பொது சுகாதார பரிசோதகர்களான பைசல் முஸ்தபா ,ஏ. எல் . எம். அஸ்லம், சுகாதார உத்தியோகத்தகர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலக பல நோக்கு செயலணியினர் மற்றும் பொலிஸார் ,இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து சாய்ந்தமருது பிரதான வீதியில் பீ. சீ. ஆர் மற்றும் அண்டிஜன் பரிசோதனைகள்மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 40 பேருக்கு இன்றைய தினம் குறித்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை கொரொனா தொற்றினை கட்டுப்படுத் தும் முகாமாக சாய்நதமருது சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் பொது மக்களுக்கு விழிப்பணர்வு நடவடிக்கைகள் மற்றும் பீ . சீ. ஆர் ,அண்டிஜன் பரிசோதனைகள்தொடர்ச்சியாக சாய்நதமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் டாக்டர் யூ.எல்.எம்.நியாஸ் தலைமையில்மேற் கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :