வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மோட்டார் குண்டு மீட்புஎஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாகனேரி குளத்துமடு பிரதேசத்தில் தனியார் ஒருவரின் தோட்ட காணியில் இருந்து (புதன்கிழமை) மாலை பழைய மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜயபெரமுன தெரிவித்தார்.

தற்போது பெரும்போக வயல் வேலைகள் ஆரம்பமாகியுள்ள நிiலில் வாகனேரி குளத்துமடு பிரதேசத்தில் விவசாயி தனது தோட்ட காணியில் வேலை செய்து கொண்டிருந்த போது மோட்டார் குண்டு ஒன்று காணப்பட்டதால் குறித்த விவசாயி வாழைச்சேனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அம் மோட்டார் குண்டு மீட்கப்பட்டதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இம் மோட்டார் குண்டு யுத்தகாலத்தில் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்றும் தற்போது விவசாய தேவைக்காக காணியில் வேலைசெய்யும் போது மோட்டர் குண்டு தென்பபட்டதையடுத்து பொலிஸார் மோட்டார் குண்டினை மீட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :