சம்மாந்துறை பிரதேச சபை வரவு செலவுத்திட்டம் தயாரிப்பதற்கான துறைசார் நிபுணர்களின் ஆலோசனை கூட்டம்



மாளிகைக்காடு நிருபர் - நூருல் ஹுதா உமர்-
ம்மாந்துறை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை மக்கள் பங்களிப்புடனான வரவு செலவுத்திட்டமாக தயாரிப்பதற்கான துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் பெறும் கலந்துரையாடல் ஜனாதிபதி விளையாட்டுக் கட்டிடத் தொகுதி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஸாத் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் துறைசார் நிபுணர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் பெறப்பட்டது. இந்த கலந்துரையாடலில் சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் ஏ.அச்சு முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக புலனாய்வு உத்தியோகத்தர். எம்.எம்.எம்.றிஸ்வி சம்மாந்துறை பிரதேச சபையின் நிதி உதவியாளர் ஏ.ஜே.எம்.ஜெஸீல், துறைசார் நிபுணர்கள், சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகள், நிதிப் பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :