விவசாயத்தை நம்பியுள்ள மக்கள் தொடர்ந்தும் விவசாயம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதா இல்லையா என்ற சந்தேகத்தில் இருக்கின்றனர்.-சுஜித் சன்ஜய பெரேரா



ந் நாட்டில் 60% வீத மக்கள் விவசாயத்தை ஒட்டியே ஜீவனோபாயத்தை மேற்கொள்கின்றனர். இரசாயன உரத்துக்கு தன்னிச்சையாக மேற்கொண்ட ஜனாதிபதியின் முடிவால் இன்று விவசாயத்தை நம்பியுள்ள மக்கள் தொடர்ந்தும் விவசாயம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதா இல்லையா என்ற சந்தேகத்தில் இன்று இருக்கின்றனர். ஒரு வருடகாலமாக நெல்,மரக்கறி மற்றும் சிறு தோட்டச் செய்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். என்று இன்றைய(12) ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சன்ஜய பெரேரா தெரிவித்தார்.

இன்று விவசாயிகள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு இரசாய உரம் அல்லது அரசாங்கம் பரிந்துரைக்கும் காபனிக் உரங்கள் ஏதையாவது தாருங்கள் என்று கோருகின்றனர்.ஆனால் இதை நிறைவேற்றி வைக்க அரசாங்கத்தால் முடியாதுள்ளது.
விடய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விடயங்ளை கூறு வந்தார்.நெற்செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்களை வழங்குவதாக கூறினார். இரண்டு மாதங்கள் கடந்து விட்டும் இன்னும் உரிய உரம் வழங்கப்பட்டதாக இல்லை. இயலாமையையே வெளிப்படுத்துகின்றனர். விவசாயிகள் வயல் நிலங்களில் இறங்கி ஆர்ப்பாட்டங்களி் ஈடுபட்டு மஹிந்தானந்த அலுத்கமகேயின் உருவ படங்களுக்கு தீ வைப்பதை பார்க்கிறோம். அவர்களின் எதிர்ப்பையே வெளிப்படுத்துகின்றனர்.

தேயிலைச் செய்கையை நம்பி 25-30% வாழ்க்கையை நடத்துகின்றனர். சிறு தேயிலைத் தோட்டச் செய்கையாளர்கள் பாரிய சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.உரிய நேரத்திற்கு உரங்கள் இன்மையால் எதிர்பார்த்த நேரத்தில் எதிர் பார்த்த கொழுந்து வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தேயிலைச் செய்கையில் கிட்டத்தட்ட 30% அறுவடை வீழ்ச்சி இன்னும் ஆறுமாதங்களில் ஏற்ப்படும் என்று துறை சார்ந்த அறிவாளர்கள் கூறுகின்றனர்.
யார் இதற்கு பொறுப்பு? சர்வதேச நாமம் கொண்ட சிலோன் தேயிலையின் கேள்வி அற்றுப் போகும் நிலை தோன்றலாம். அரசாங்கம் எந்த நிலைப்பாட்டில் இருந்து கொண்டு இத்தகைய முடிவுகளை மேற்கொண்டது என்று எங்களுக்குத் தெரியாது. அந்நியச் செலாவனி அல்லது டொலர் எங்களுக்குத் தேவை என்று அரசாங்கம் கூறுகிறது,ஆனால் 1.5 பில்லியன் அந்நியசெலாவனியைப் பெற்றுத் தரும் தேயிலைச் செய்கையை சிக்கல்களுக்குள் மாட்டி வைத்துள்ளனர். 30 மில்லியன் செலவாகும் உரங்களை இடைநிறுத்தி விட்டு 1.5 பில்லியன் வருமானத்தை பெற்றுத் தரும் தேயிலைச் செய்கையை பாதிக்கும் முடிவெடுத்தது எந்த நிலைப்பாட்டில் இருந்து கொண்டு என்று நான் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களிடம் கேட்க விரும்புகிறேன். இது அரசாங்கத்தின் இயலாமையை காட்டுகிறது.தேயிலைச் செய்கையில் ஏற்ப்படும் பாதிப்பு மிக ஆபத்தானது.

அத்தியவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த முடியவில்லை.வர்த்தமானிகளை பேன முடியவில்லை. சகலதையும் மீளப் பெறுகின்றனர்.
ஜனாதிபதியின் இயலாமையை அவரே ஒப்புக் கொண்டு உரையாற்றும் போது அதை வெளிப்படுத்தினார். மீண்டும் ஆட்சிக்கு காலம் கேட்கிறார். சட்டத்தின் ஆட்சி,ஒரே நாடு ஒரே சட்டம்,சௌபாக்கியத்தின் தொலைநோக்கில் மக்களுக்கு நிவாரனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் 69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர். பிளாடிமிர் புடின்,லீக்வான் யூ,மஹாதிர் மொஹமட் போன்ற தலைவரையே நாங்கள் ஜனாதிபதியாக கொண்டு வரவுள்ளோம் என்று தற்போதைய அமைச்சர்கள் அன்று தேர்தல் காலங்களில் கூறினர்.

தேசிய பொருளாதாரம் பற்றி பாரிய வாக்குறுதிகளை வழங்கியே ஆட்சிக்கு வந்தனர். விமல் வீரவன்ச இது தொடர்பாக வீராப்பு பேசினார். விமல் வீரவன்ச புல்மோட்டை கடதாசி உற்ப்பத்தி சாலைக்கு சென்று இதற்கு பிறகு கடதாசிகளை ஒருபோதும் இறக்குமதி செய்யப்போவதில்லை என்றார்,செவனகல,பெலவத்த,

ஹிங்குரான போன்ற சீனித் தொழிற் சாலைகளுக்குச் சென்று இனி ஒருபோதும் சீனி இறக்குமதி செய்வதில்லை என்றும் தன்னிறைவு கொண்டதாகவும் மாற்றுவதாக கூறினார். பால் உற்ப்பத்தியாளர்களைச் சந்திக்க சென்ற விமல் வீரவன்ச இனி பால் உற்ப்பத்தியில் தன்னிறைவு கொண்ட நாடாக மாற்றுவதாக கூறினார்.இவருக்கும் உதய கம்பன்பிலவிற்கும் வெறும் வாய் சொல் வீரர்கள் மாத்திரம் தான்.பிரயோக ரீதியாக எந்த பயனும் இல்லாதவரகள்.தொடர்ந்தும் இவர்கள் இவ்வாறு மக்களை ஏமாற்ற முடியாது.
நல்லாட்சி காலத்தில் திறப்பு விழாவிற்கு இந்தியப் பிரதமர் மோடி வருகை தந்த போது கறுப்புக் கொடி ஏந்துமாறு விமல் வீரவன்ச கூறினார்.எம் சி சி ஒப்பந்தம் வந்த போது அமெரிக்காவின் ஆதிக்கம் இங்கு வருவதாகவும் பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறினார். இன்று இந்தியாவிற்கு திருகோணமலை எண்ணெய் குதங்களையும்,துறைமுக முனையங்களையும் வழங்குகின்றனர்.மறுபக்கம் சீனாவிற்கும் நாட்டின் வளவழங்களை வழங்குகிறார்கள். விமல் மற்றும் உதய கம்பன்பில போன்றவர்களிடம் அன்று இருந்த தேசப்பற்று இன்று எங்கே சென்று விட்டது என்று வினவுகிறோம். மக்களை தொடர்ந்தும் அவர்களால் ஏமாற்ற முடியாது.தற்போதைய ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையால் நாட்டை கட்டியொழுப்ப முடியாது என்றும் நாட்டை கட்டியொழுப்பும் ஆற்றல் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களிடமே இருப்பதாகவும் தெரிவித்தார்.
மக்களின் வரிப்பணத்தில் பல கோடி செலவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிர்மானிக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது.சுற்றுலாப்பயனிகளோ அல்லது வெளிநாட்டில் இருந்து வரும் இலங்கை பிரஜைகளோ விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படுவதில்லை. பயனற்ற பரிசோதனை கூடமாக மாற்றி பல கோடிகளை செலவளித்துள்ளனர்.இதனால் சுற்றுலாப்பயனிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் எந்த வித பயனும் இல்லை. ஏலவே அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகளில் சூறையாடிய கறுப்பு பிம்பம் கொண்ட இந்த அரசாங்கம் இன்று சுற்றுலாப் பயனிகளிடமிருந்து பிசிஆர் பரிசோதனைக்கு என்று 40 டொலர்களை அறவிடுகிறது.இவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. பயன எல்லை வரை பயனிக்க அனுமதியளிப்படுகிறது.மறுபுறம் இவ்வாறு 40 டொலர்களை அறவிட்டு பிசிஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்படாத விடத்து சர்வதேச ரீதியாக தப்பப்பிராயம் சுற்றுலாப் பயனிகள் மூலமே ஏற்ப்படும். இவ்வாறு சென்றால் அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளாலயே சுற்றுலாத்துறையும் கிட்டிய எதிர்காலத்தில் வீழ்ச்சியடையும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :