யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் வட மாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உத்தியோகத்தர்களால் நேற்றையதினம் (2021.09.16) யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, சங்கானை ஆகிய பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட நடமாடும் மரக்கறி வியாபாரிகளிடம் விலைதொடர்பான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இதன்போது விலை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.
வீடுகளுக்கு பொதிசெய்யப்பட்ட பொருட்களை விநியோகிக்கும் வியாபார நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன் விலை தொடர்பான விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு ஒழுக்கமான வியாபார நடவடிக்கை தொடர்பான அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் விசாரணைசெய்யப்பட்டதுடன் அதற்கான தீர்வுகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டது. அத்துடன் முறைகேடான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கலும் செய்யப்பட்டது.
0 comments :
Post a Comment