மாவடிப்பள்ளியிலுள்ள உள்ளக வீதிகளின் வடிகான்கள் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் குப்பைகள் சூழ்ந்து மாசடைந்து காணப்பட்டது. இதனால் மழைகாலங்களில் வெள்ள நீர் ஓட்டம் தடைப்படுவதுடன் நீர் தேங்கி நின்று டெங்கு நோய் பெருக்கத்திற்கும் வழிசமைக்கின்றது. இதனை பலமுறை காரைதீவு பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இது சம்மந்தமாக பலமுறை பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் மாவடிப்பள்ளி உள்ளக வீதி வடிகான்கள் சுத்தம் செய்யப்படாமல் மாசடைந்து காணப்படுகிறது. காரைதீவு பிரதேச சபை உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல செய்திகளும் பிரசுரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது சம்மந்தமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை ஊறுப்பினர் கௌரவ ஜலீல் அவர்களிடம் பிரதேச மக்கள் முறையிட்டபோது அவர் கூறியதாவது : எமது ஊரின் உள்ளக வீதிகளின் வடிகான்களை சுத்தம் செய்ய பிரதேசசபை ஊழியர்களை அனுப்புமாறு தவிசாளரிடம் பல முறை கூறியும் இது சம்மந்தமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மாவடிப்பள்ளி விடயங்களில் பொடுபோக்காக இருக்கின்றார், எனவே இறுதியாக எழுத்து மூலம் வேண்டுகோள்விடுக்கின்றேன் என கூறினார்.
அதனடிப்படையில் கடந்த 18/08/2021 ம் திகதியிடப்பட்டு மாவடிப்பள்ளி உள்ளக வடிகான் சுத்தப்படுத்தல் சம்மந்தமாக என்று தலைப்பில் எமதூரிலுள்ள உள்ளக வடிகான்களை சுத்தம் செய்துதருமாறு காரைதீவு பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலம் கௌரவ உறுப்பினர் ஜலீல் அவர்களின் லெட்டர் ஹெட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு; உதவி உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சர் ஆகியோருக்கு தகவலுக்காக பிரதியும் அனுப்பப்பட்டது. ( பிரதி இணைக்கப்பட்டுள்ளது)
அதன் பிரகாரம் மாவடிப்பள்ளி உள்ள வீதி வடிகான்கள் இரண்டு நாட்களாக சுத்தம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது அல்ஹம்துலில்லாஹ். எனவே மாவடிப்பள்ளி விடயத்தில் அசமந்தப்போக்குடனும், வேற்றுமையுடனும் செயற்படும் தவிசாளருக்கு தக்க பாடம் புகட்டி எமது ஊரின் அபிவிருத்திகள், செயற்பாடுகளில் ஊருக்காகவும் மக்களுக்காகவும் முழுமனதுடன் செயற்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ ஜலீல் அவர்களுக்கு மாவடிப்பள்ளி மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
0 comments :
Post a Comment