ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடி தொடர்பான முக்கிய கூட்டம் பொலிஸாரின் தலையீட்டால் இரத்து!



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முக்கிய கூட்டமொன்று பொலிஸாரின் தலையீட்டால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி – மஜ்மா நகரில் நிலவும் இடப்பற்றாக்குறை தொடர்பாக இக் கூட்டம் தவிசாளர் ஏ.எம்.நெளபர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டம் ஆரம்பமாக இருந்த சில நிமிடங்களுக்கு முன்னர் அங்கு வந்த வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தலைமையிலான பொலிஸ் குழுவினர் கூட்டத்தை நடாத்த வேண்டாம் என்றும் கூட்டத்துக்கு வந்த நபர்களை கலைந்து செல்லும் படியும் வேண்டிக் கொண்டனர்.

இதற்கான காரணத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுனவிடம் சட்டத்தரணி ஹபீப் றிபான் கேட்டறிந்த போது, கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக வேண்டியே இக் கூட்டத்தை நடாத்த வேண்டாம் என்று பொலிஸ் பொறுப்பதிகாரி விளக்கமளித்தார்.

பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய கூட்டத்துக்கு வருகை தந்த முக்கியஸ்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :