யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் தகவல் தொழில்நுட்ப கூடம் திறந்து வைப்பு



யாழ் லக்சன்-
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர் நிதிப் பங்களிப்புடன், மருத்துவ பீட பழைய மாணவர்களால் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கையளிக்கப்பட்ட தகவல் தொழில் நுட்ப கூடத்தின் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி வைத்திய கலாநிதி சுரேந்திரகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா தகவல் தொழில் நுட்ப கூடத்தைத் திறந்து வைத்தார்.

முன்னாள் மருத்துவ பீடாதிபதியும், சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் ரவிராஜ், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், முன்னாள் மாணவர்கள் உட்படப் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நாட்டின் தற்போதைய கொரோனா சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு, சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு இந்த நிகழ்வு மிகவும் குறைந்தளவானர்களுடன் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :