நிந்தவூர் அட்டப்பளம் ஸ்ரீ சித்தி விநாயகர் அற நெறி பாடசாலைக்கான கட்டிடம் அமைப்பதற்கான சிரமதானப் பணி அட்டப்பள்ளம் பிரதேசத்தில் இன்று (17) இடம்பெற்றது இப்பிரதேசத்தில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களின் பங்கேற்புடன் அட்டப்பளம் ஸ்ரீ சிங்காரபுரம் மாரியம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் ரீ. கோபாலன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வானது குறித்த பிரிவின் கிராம சேவகர் எஸ்.எம்.ஐ அஷதுல்லாஹ், கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜ், ஜூரிஸ்டார் விளையாட்டுக் கழகம், என்.சி.என் டயமன் விளையாட்டுக் கழகம், ஸ்ரீ சித்திவி நாயகர் ஆலய நிர்வாகிகள், ஸ்ரீ சிங்காரபுரம் மாரியம்மன் ஆலய நிர்வாகிகள், முஸ்லிம் பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்ளிட்ட அட்டப்பளம் பிரதேச பல்லின மக்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment