தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட்டதுடன் இளையோர், சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்



னிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட்டதுடன் இளையோர் மற்றும் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்
நாடளாவிய ரீதியில் அழுலாக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் செவ்வாய்க்கிழமை (21) நிறைவடையுமென எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இளையோர் 15 – 19 வயதுகளுக்கிடையிலான தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக 2021 ஒக்டோபர் 1 (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.00 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதென வெள்ளிக்கிழமை (17) பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்தி சில்வா அவர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கையூடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நேற்று காலை இடம்பெற்ற கொவிட் - 19 தடுப்புச் செயலணியின் கலந்துரையாடலின் போது அத்தியவசிய சேவைகள், மோட்டார் வாகன மற்றும் காணிப்பதிவு திணைக்களம் என்பவற்றின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டதோடு 15 - 19 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மருந்தகங்கள், விவசாயம், ஆடை மற்றும் ஏற்றுமதி துறை, பொருளாதார மையங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் வழமை போல் இடம்பெறும் என்பதுடன், இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சுகாதாரத் துறையின் ஒருங்கிணைந்து இதுவரை தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுமெனவும் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :