வரலாற்றில் முதல்தடவையாக பொத்துவில் பிரதேசத்திற்குட்பட்ட சங்குமண்கண்டி கிராமத்திற்கு குழாய் விநியோகம் கிடைக்கப்பெறவுள்ளது.
அதற்கான நீர்க்குழாய்கள் பதிக்கும் வேலைகள் பிரதானவீதியில் தற்போது நடைபெற்றுவருகின்றன.
பொத்துவில் பிரதேசசபையின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் த.சுபோதரனின் முயற்சியில் சுமார் 13லட்சருபா செலவில் சுமார் 360மீற்றர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொத்துவில் பிரதேசசபையினர் இதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர்.இதனால் பிரதானவீதியிலுள்ள 32 குடும்பங்கள் தண்ணீரைப்பெறும் வாய்ப்புள்ளது.
கிராமத்தின் உள்பகுதியிலுள்ள மக்கள் தண்ணீரைப்பெறுவதானால் நீரிணைப்பிற்கு விண்ணப்பித்து அதற்கான பணத்தை செலுத்தினால் விரைவில் பெறமுடியும் என பிரதேசசபை உறுப்பினர் த.சுபோதரன் கூறினார்.
கடந்தகாலங்களில், சங்குமண்டிக்கிராமமக்கள் வருடத்தில் பெரும்பாகம் குடிநீரின்றி அலைந்துதிரிந்தனர். பிரதேசசபையின் ஏற்பாட்டில் வவுசர் மூலம் இப்பிரதேசத்தில் குடிநீர் வழங்குவது குறிப்பிடத்தக்கது.
திருக்கோவில் பிரதேசசபையின் வடபுறஎல்லையிலுள்ள சங்குமண்டிக்கிராமம் வரை குழாய்நீர்விநியோகம் கடந்த 30வருடகாலமாக இருந்துவந்தபோதிலும் அதற்கு அப்பால் குழாய்களை பதிக்க யாரும் முயற்சிக்கவில்லை. அதனால் அம்மக்கள் குடிதண்ணீருக்காக அலையநேரிட்டது.
சங்குமண்கண்டிக்கு அப்பாலுள்ள கோமாரி தொடக்கம் பல தமிழ்க்கிராமங்கள் குழாய்நநீரிணைப்பின்றி சுத்தமான குடிநீரின்றி தற்போதும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment