அரசாங்கம் உள்நாட்டு தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் ஏற்பாட்டில் தென்னை அபிவிருத்தி சபையின் அனுசரனையுடன் ஆயிரம் தென்னம் கன்றுகளின் ஒரு தொகுதி கல்குடா பிரதேச பயனாளிகளுக்கு வழங்கி வைப்பதற்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
குறிப்பிட்ட தென்னைக்கன்றுகள் கல்குடா பிரதேசத்திலுள்ள பிரதேச சபை உறுப்பினர் மற்றும் பிரதேச செயற்பாட்டாளர்கள் மூலம் மக்களுக்கு வழங்குவதற்காக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் எமது பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் பல்வேறு வாழ்வாதார உதவிகள் இப்பிரதேசத்தில் இடபெற உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment