முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் தற்போதைய நிலை தொடர்பில் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் திட்டமிட்டு தொல்லியல் திணைக்களத்தால் பௌத்த மயமாக்கப்பட்டது போல வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயமும் பௌத்த மயமாக்கப்படுகிறதா?
தொல்லியல் திணைக்களத்தினால் கள நடவடிக்கை மேற் கொள்வதாக ஏற்கனவே உள்வாங்கப்பட்ட வெடுக்குநாறி மலைப்பகுதி தற்போது பொது மக்கள் செல்ல விடாது தடுக்கப்பட்ட நிலையில் இராணுவப் பிரசன்னம் அதிகரித்துள்ளது.
அங்கு வாழும் மக்கள் சந்தேகப்படும் அளவிற்கு பல செயற்பாடுகள் இராணுவத்தால் மேற் கொள்ளப்படுகின்றன. ஏலவே வெடுக்குநாறி மலையில் பல லிங்க உருவங்கள் உடைக்கப்பட்டும் பல சூலங்கள் காணாமல் சென்றதாகவும் மக்கள் கூறினர்.
தற்போது இராணுவத்தினர் உழவு இயந்திரத்தில் வெடுக்குநாறி மலையை நோக்கி பௌத்த பிக்குகள் அமர்ந்து பிரித்து ஓதும் ஆசனங்களை கொண்டு செல்வதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொது மக்களை செல்ல விடாது இராணுவ பிரசன்னத்துடன் அரங்கேறும் செயற்பாடுகளை பார்த்தால் குருந்தூர் மலையிலும் இவ்வாறு தான் இந்துக்களின் தொன்மைவாய்ந்த வழிபாட்டு இடத்தில் பௌத்தம் அரங்கேறியது.
திட்டமிட்ட கலாசார படுகொலை இந்த கொரோனா பெரும் தொற்றுக் காலத்தில் தமிழின அழிப்பாக தொடர்கிறது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment