கடந்த 2004 ஆம் ஆண்டும் பறைச்சேரி வெளிப் பகுதியில் போலியாக காணிகளை விற்பனை செய்வது தொடர்பில் முன்னாள் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பா.செந்தில்நாதன் அவர்கள் ஊடகங்கள் வாயிலான அறிவித்திருந்தமையினையும் இங்கு நினைவுபடுத்துகின்றோம். (பத்திரிகை செய்தி இணைக்கப்பட்டுள்ளது)
அந்த வகையில் மீண்டும் தற்பொழுது யாழ்ப்பாணம் அராலி வீதி ஜே 88 கிராம சேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட பறைச்சேரிவெளி புதிய குடியிருப்பு பகுதிகளில் முறைகேடான வகையில் காணிகளை எல்லையிட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்வதனை அண்மைக்காலங்களில் அதிகளவில் காணமுடிகின்றது. இப் பிரதேசத்தில் உள்ள காணிகளுக்கு உரிமையாளர்கள் இருக்கின்ற பொழுதும் போலி காணி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
நாட்டில் கொவிட் 19 தாக்கம் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு வருகைதர முடியாத நிலையில் அராலி வீதி பறைச்சேரிவெளி புதிய குடியிருப்பு பகுதி காணி உரிமையாளர்கள் வெளிமாவட்டங்களில் இருப்பதனை சாதகமாகப் பயன்படுத்தி தற்;பொழுது இந்த சட்டவிரோத காணி கைமாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ் விடயம் தொடர்பில் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், குறித்த போலி நபர்களிடம் இருந்து சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படும் காணிகளை கொள்வனவு செய்வதன் மூலம் ஏமாற வேண்டாம் என்பதை முன்கூட்டியே விழிப்புணர்வுக்காக இத்தால் பகிரங்கமாக தெரியப்படுத்துவதுடன், குறித்த பகுதியில் காணிகளை கொள்வனவு செய்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
மேலும் இப் போலி காணி விற்பனையில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒரு சிலர் கூட்டுச் சேர்ந்தே ஈடுபட்டுவருவதாக அறிய முடிகின்றது. இச் செயற்பாடானது எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் இன முரண்பாட்டிற்கு வித்திடக் கூடும் என்ற அச்சத்தை எமக்கு ஏற்படுத்துகின்றது. எனவே இது தொடர்பில் இரு சமூகமும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது சமூக ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என்பதை இங்கு விசேடமாக சுட்டிக்காட்டுகின்றோம்.
இவ்வண்ணம்.
வடக்கு சோனகதெரு முஸ்லிம் பறைச்சேரி வெளி குடியேற்ற சங்கம்.
தொடர்புகளுக்கு :- தலைவர் :- 0773791633 செயலாளர் :- 0777155119 பொருலாளர் :- 0772405405
0 comments :
Post a Comment