இதற்கமைய நேற்றைய தினம் இலங்கையில் 4,282 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன்படி, இதுவரையிலும் நாட்டில் 390,000 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும், அவர்களில் 40,475 பேர் மட்டுமே தற்போது நோயாளர்கள்.குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,44,381
அத்துடன், நேற்றைய தினம் மேலும் 183 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த அனைத்து மரணங்களும் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 136 பேரும், 30 முதல் 59 வயதிற்குட்பட்டவர்கள் 45 பேரும் , 30 வயதிற்குட்பட்டவர்கள் இருவரும் அடங்குவர்.
இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 91 வீதமானோர் எந்தவித கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என தொற்றுநோயியல் பிரிவின் மருத்துவர் சமித கினிகே தெரிவித்தார்.
இதேவேளை, நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதனால், வைத்தியசாலைகளில் ஆக்ஸிஜனின் பயன்பாடும் அதிகரித்து வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவந்துடாவா தெரிவித்தார்.
0 comments :
Post a Comment