கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுதேச வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கவும் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்குமான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சுதேச வைத்திய மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.
இதேவேளை, எந்தவொரு நபரும் பதிவு செய்யப்பட்ட சுதேச ஆயுர்வேத மருத்துவர் ஒருவரை சிகிச்சைக்காக தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்தி இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
மேலும்இ 'அபே வெத மஹத்தயா' என்ற இணையதளத்தை அணுகுவதன் மூலம் இந்த வசதியைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment