தடுப்பூசி வழங்கும் நிகழ்வு


அஷ்ரப் ஏ சமத்-

சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுவரும்
கோவிட் -19 முதலாவது தடுப்பூசி வழங்கும் நிகழ்வு மீரிகம மருத்துவ வைத்திய அதிகாரிக் காரியாலயத்தினால் எல்லலமுல்ல மற்றும் மீவிட்டிய பிரதேச வாழ் மக்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டு கடந்த 15/07/2021 ஆம் திகதி பொதுச் சுகாதார மருத்துவர் திரு. வி.எல்.ஏ.திவாகாரவினது தலைமையில்

பஸ்யால எல்லலமுல்ல ஸஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபர் எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா அவர்களது பூரண ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பொதுமக்கள் 1146 பேர் இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டனர்.

இதற்கு பாடசாலை ஆசிரியர் குழாம், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மொடர்ன் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், கிராம சேவை அலுவலர் மற்றும் நலன்விரும்பிகள் யாவரும் நிகழ்வைப் சிறப்பிக்க கரம் கோர்த்தனர். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :