இந்நிலையில் பெருநாளைக்கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் உவகையடைகின்றேன் என டவர் நிதிய பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாஷிம் உமர் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,சுகாதார வழிமுறைகளை அனுசரித்து நாம் அனைவரும் நாட்டில் நிலவிவரும் நெருக்கடியான நிலையிலிருந்து அனைத்து இன மக்களும் மீண்டு வருவதற்காகப் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.
தியாகத்தின் நினைவை மாத்திரம் இந்தப் பெருநாள் தினத்தில் இரை மீட்டிக் கொள்பவர்களாக இல்லாமல், எங்களுக்கு மத்தியில் அன்றாட வாழ்வாதாரத்துக்காக, வறுமையில் சிக்குண்டு சிரமப்படுகின்றவர்களின் நிலைமையையும் சீர்தூக்கிப் பார்த்து அவர்களுக்கு உதவுவதற்கு முன்வர வேண்டும் என்றார்.
0 comments :
Post a Comment