கிண்ணியாவுக்கு உப பிரதேச செயலகம் கோரி மஹஜர் கையளிப்புஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியாவில் உப பிரதேச செயலகம் கோரி மஹஜர் ஒன்றை கையளிக்கும் நிகழ்வு இன்று (23) காலை 11.00 மணிக்கு கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வினை கிண்ணியா மஜ்லிஷ் அஸ்ஸூரா சபை ஏற்பாடு செய்திருந்தது.
கிண்ணியாவில் சுமார் 90 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.நிருவாக ரீதியாக பல பிரச்சினைகளை இவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறு எதிர் நோக்கும் பிரச்சினைகளை இலகுபடுத்தும் நோக்கில் கிண்ணியா உப பிரதேச செயலகம் ஒன்றை கோருகின்றனர்.

கிண்ணியாவில் சுமார் 32 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன இவற்றுள் 11 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக இவ் உப பிரதேச செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்றும் 11 ஆயிரம் நபர்களை உள்ளடக்கியதாக 40 ஆயிரம் குடும்பங்கள் இவ் உப பிரதேச செயலகத்துக்குள் உள்ளடங்குகின்றன.
போக்குவரத்து உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் நிருவாக ரீதியிலான செயற்பாடுகள் அனைத்தையும் தனி ஒரு பிரதேச செயலாளர் பிரிவினால் செயற்படுத்த முடியாதுள்ளது.
எனவே இவ் உப பிரதேச செயலக பிரிவொன்றை ஏற்படுத்தித் தருமாறு இவ் மஹஜர் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வு கிண்ணியா மஜ்லிஷ் அஸ்ஸூரா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் சார்பாக அவருடைய பிரதிநிதி கே.எம்.நிஹார்(பிரதேச சபை தவிசாளர்), பாராளுமன்ற உறுப்பினர் இம்ரானின் பிரதிநிதியாக அவருடைய பிரத்தியேகச் செயலாளர் சதாத் கரீமும் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி,உதவி பிரதேச செயலாளர் பாஹிமா, மற்றும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.றிஸ்வி,குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம்.அஜீத்,கிண்ணியா சூறா சபை தலைவர் ஏ.ஆர்.எம்.பரீட் ,சூறா சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :