சௌபாக்கியா உற்பத்தி கிராமம் வறுமை ஒழிப்பு திட்டமானது காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் J/48 காரைநகர் மத்தி பிரதேசத்தில் இன்றையதினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
காரைநகர் மத்தி, அம்பாள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் உலர்மீன் (கருவாடு) உற்பத்திகளை மேலும் அதிகரிக்கச் செய்து, வெளிநாட்டு சந்தைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்தச் சௌபாக்கிய உற்பத்தி கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்கு உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்களையும் அவர்களது உற்பத்திகளையும் பார்வையிட்ட கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள், இத்தொழில் துறை மேலும் விருத்தியடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்துகொண்டார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், பிரதேச செயலக அதிகாரிகள் , கிராம சேவையாளர், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் உள்ளிட்டோரும் இத்திட்டத்தை செயற்படுத்தும் பயனாளிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

0 comments :
Post a Comment