1400 ஆண்டுகளுக்கு முன்பு முகம்மத் என்பவரால் கொண்டுவரப்பட்டதுதான் இஸ்லாமிய மதம் என்றும், இஸ்லாத்தைவிட தங்களது மதமே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அருளப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மதம் என்றும் யூதர்கள் கூறுகின்றனர்.
யூதர்கள் கூறுவது உண்மையென்றால் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூர்ந்து ஹஜ்ஜுப் பெருநாளை முகம்மது நபியின் சந்ததியினர்களான முஸ்லிம்கள் ஏன் அனுஸ்டிக்க வேண்டும் என்பதுதான் இன்றைய கேள்வியாகும்.
இஸ்லாமிய மார்க்கம் முகம்மது நபியிலிருந்து தோன்றவில்லை. உலகத்தின் முதல் மனிதன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிலிருந்து ஆரம்பிக்கின்றது. அந்த வரிசையில் முகம்மது நபி அவர்கள் இறுதியாக அனுப்பபட்ட இறை தூதுவராவார்கள்.
யூத சமூகம் இப்ராஹீம் நபியின் பேரரான யஹ்கூப் நபியிலிருந்து ஆரம்பிக்கின்றது.
அதாவது இப்றாஹீம் நபியின் புதல்வர்களில் ஒருவரான இஸ்ஹாக் நபியின் புதல்வர்தான் யஹ்கூப் நபி அவர்கள். இவருக்கு இஸ்ரெவேல் என்னும் இன்னுமொரு பெயர் உள்ளது. நபி யஹ்கூப் அவர்களின் 12 புதல்வர்களில் ஒருவர்தான் நபி யூஸுப் அவர்கள்.
யஹ்கூப் நபியின் புதல்வர்களே யூதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
நபி யஹ்கூப் தலைமையில் அவரது குடும்பத்தினர் 83 பேர்கள் எகிப்தில் குடியேறியதுடன். இவர்களே பிற்காலத்தில் யூத சமூகமாக வளர்ச்சியடைந்தனர்.
யூத சமூகத்தினர் உலகில் வழி தவறியவர்களாகவும், இறைவனுக்கு மாறுசெய்தவர்களாகவும், பூமியில் குழப்பம் விளைவித்தவர்களாகவும் வாழ்ந்து வந்தனர். இவர்களை நல்வழிப்படுத்தவே யூத சமூகத்திலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் தூதுவர்களை இறைவன் அனுப்பினான்.
ஆனால் யூத சமூகத்தினர் நபிமார்களின் போதனைகளை ஏற்று நடக்கவில்லை. மாறாக குதர்க்கவாதிகளாகவே இருந்தார்கள். அத்துடன் தங்களை நல்வழிப்படுத்த வந்த பல நபிமார்களை கொலை செய்தார்கள்.
அந்தவகையில் யூத சமூகத்திலிருந்து வந்தவர்தான் நபி மூஸா (மோசஸ்), நபி ஈசா (இயேசு) அவர்கள். மூஸா நபிக்கு தௌராத் வேதம் இறைவனால் அருளப்பட்டது. இவரை யூதர்கள் மோசஸ் என்றும், “தௌராத்” வேதத்தினை “தோரா” என்று அழைகின்றனர்.
தாங்கள் மூஸா நபியின் தௌராத் வேதத்தை பின்பற்றுவதாக யூதர்கள் கூறினாலும், அவர்கள் மூஸா நபிக்கு கட்டுப்படவர்களாக வாழவில்லை. மாறாக அப்போது காளை கன்றுகளை வணங்கினார்கள்.
وَاِذْ وٰعَدْنَا مُوْسٰٓى اَرْبَعِيْنَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهٖ وَاَنْـتُمْ ظٰلِمُوْنَ
மேலும் நாம் மூஸாவுக்கு (வேதம் அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.
(அல்குர்ஆன் : 2:51)
وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ اِنَّكُمْ ظَلَمْتُمْ اَنْفُسَکُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوْبُوْآ اِلٰى بَارِٮِٕكُمْ فَاقْتُلُوْٓا اَنْفُسَكُمْ ذٰلِكُمْ خَيْرٌ لَّـكُمْ عِنْدَ بَارِٮِٕكُمْ فَتَابَ عَلَيْكُمْ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ
(அல்குர்ஆன் : 2:54)
وَلَقَدْ جَآءَکُمْ مُّوْسٰى بِالْبَيِّنٰتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهٖ وَاَنْـتُمْ ظٰلِمُوْنَ
(அல்குர்ஆன் : 2:92)
وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَکُمُ الطُّوْرَ خُذُوْا مَآ اٰتَيْنٰکُمْ بِقُوَّةٍ وَّاسْمَعُوْا قَالُوْا سَمِعْنَا وَعَصَيْنَا وَاُشْرِبُوْا فِىْ قُلُوْبِهِمُ الْعِجْلَ بِکُفْرِهِمْ قُلْ بِئْسَمَا يَاْمُرُکُمْ بِهٖۤ اِيْمَانُكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதை செவியேற்றுக் கொள்ளுங்கள். என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். (அதற்கு அவர்கள்) நாங்கள் செவியேற்றோம்; மேலும் (அதற்கு) மாறு செய்தோம் என்று கூறினார்கள்.
மேலும் அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்கள் இதயங்களில் காளைக்கன்றின் (பக்தி) புகட்டப்பட்டது. நீங்கள் முஃமின்களாக இருந்தால் உங்களுடைய ஈமான் எதை கட்டளையிடுகிறதோ அது மிகவும் கெட்டது என்று (நபியே!) நீர் கூறும்.
(அல்குர்ஆன் : 2:93)
முகம்மது நபிக்கு முன்பு இறைவனால் அனுப்பப்பட்ட இறைதூதுவரான ஈசா நபி (இயேசு) அவர்களை யூதர்கள் கொலை செய்ய முயற்சிக்கும்போதே அவரை இறைவனால் உயர்த்தப்பட்டார்கள்.
எனவேதான் இஸ்லாம் ஒருபோதும் 1400 ஆண்டுகால வரலாற்றை கொண்டதல்ல என்பதனை இன்றைய ஹஜ்ஜுப் பெருநாளை உலகில் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடுவதன் நோக்கத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

0 comments :
Post a Comment