ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு ஏறாவூர் மீராகேணி வாராந்த சந்தை இன்று 20.07.2021 விசேடமாக கூடியது .



ஏறாவூர் நிருபர்-நாஸர்-
மிழ் , முஸ்லிம் மற்றும் சிங்களம் ஆகிய மூவினங்களையும் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோரும் இச்சந்தைக்கு வருகை தந்திருந்தனர்.

சுகாதார விதிமுறைகளைப்பேணி சந்தையின் நடவடிக்கைகள் நடைபெற்றவேளை மீராகேணி கிராம அபிவிருத்திச்சங்கத்தினர் நுகர்வோருக்கும் வியாபாரிகளுக்கும் முகக்கவசங்களை இலவசமாக வழங்கியதை அவதானிக்க முடிந்தது.
மீராகேணிச் சந்தை பிரதி வியாழக்கிழமைகளில் மாத்திரம் கூடுகின்றபோதிலும் ஹஜ்பெருநாளை முன்னிட்டு பிரதேச மக்களின் நலன்கருதி விசேடமாகக் கூடியது.

ஆடைகள், மரக்கறிவகைகள், பழவகைகள் மற்றும் மளிகைப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்துவகையான பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :