மருதமுனை லொக்டொன் நாளை(17) தளர்த்தப்படவுள்ளது.



கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்
அஸ்மி தெரிவிப்பு!

சர்ஜுன் லாபீர்-
கொரோனாவினால் பாதிக்கப்பட்டு கடந்த 03ம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்ட மருதமுனை-03 கிராம சேகவர் பிரிவு நாளை(17) காலை 6 மணியுடன் தளர்த்தப்படுவதற்கு தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு பரிந்துரை செய்யப்படவுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி தெரிவித்தார்.

மருதமுனை-03 கிராம சேவகர் பிரிவினை விடுவிப்பது சம்மந்தமாக இன்று(16) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்புரையின் பெயரில் தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அஸ்மி தலைமையில் நடைபெற்ற
உயர் மட்டக் கூட்டத்தில் மேற்படி பரிந்துரைக்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மருதமுனை-03 கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்ட நிலைமை நாளை காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டாலும் தொடர்ந்தும் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இவ் உயர் மட்டக் கலந்துரையாடலில் கல்முனை பிரதேச செயலாளர்,பொலிஸ்,இராணுவ உயர் அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,மருதமுனை உலமா சபை பிரதிநிதிகள், மருதமுனை வர்த்தக சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :